சுடச் சுடச் செய்திகள்

இணையத்தில் பரவும் புதிய 50 ரூபாய்

புதுடெல்லி: புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நீல நிறத்தில் இருக்கும் இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்று கூறப்படு கிறது. அதேநேரம், பழைய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon