வெடித்துச் சிதறிய சீன ஸயோமி திறன்பேசி

ஹைதராபாத்: திறன்பேசி வெடித்துச் சிதறிய சம்பவத்தில் உரிய இழப்பீடு வழங்குமாறு சீன கைபேசி நிறுவனமான ஸயோமியைக் கேட்டுக் கொண்டுள்ளார் ஆந்திர இளைஞர் ஒருவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாவனா சூரியகிரண் என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ‘ஃபிலிப்கார்ட்’ இணைய சந்தை மூலம் ஸயோமி திறன்பேசி ஒன்றை வாங்கியுள்ளார். அண்மையில் அவர் தனது காற்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அந்தத் திறன்பேசி திடீரென்று வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் திறன்பேசியும் முழுமையாக தீயில் கருகி விட்டதைத் தொடர்ந்து அவர் இழப்பீடு கோரியுள்ளார்.2017-08-19 06:00:00 +0800