டோக்லாம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு

புதுடெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு முதல் முறையாக ஆதரவு தெரி வித்துள்ளது ஜப்பான். ஆனால் உண்மை நிலை என்னவென்று தெரியாமல் இதில் ஜப்பான் கருத்துத் தெரிவிக்கக் கூடாது எனக் கண்டனம் தெரி வித்துள்ளது சீனா. இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு எல்லை பிரச்சினை குறித்து பேசியபோது, “டோக்லாம் பகுதி சீனா மற்றும் பூட்டான் இடையேயான பிரச்சி னைக்கு உரியது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அந்தப் பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக முடிவு செய்து மாற்றக்கூடாது. பிரச் சினைக்கு அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும். “இந்தச் சூழ்நிலையை ஜப்பான் தீவிரமாக கண்காணித்து வருகி றது. “பூட்டானுடனான இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த விவகாரத் தில் இந்தியா தலையிட்டுள்ளது.

இதனை சுஷ்மா தெளிவாகக் கூறியுள்ளார். “அனைவரும் ஏற்றுக் கொள் ளும் வகையிலான தீர்வை ஏற் படுத்தத் தூதரக ரீதியிலான முயற் சியை இந்தியா மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். “அமைதி ரீதியிலான தீர்வுக் கான இந்த முயற்சி மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார். ஜப்பானின் இந்தக் கருத் துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, டோக்லாமில் உள்ள நிலை குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் ஜப்பான் மூக்கை நுழைக்கக்கூடாது எனக் கூறி உள்ளது.

போர் மூளும் அபாயம் இதற்கிடையே, இந்தியா, சீனா விற்கு இடையில் ராணுவ சண்டை மூளும் அபாயம் உள்ளதாக ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவிக்கிறது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு எல்லையில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டது. பதற்றமான சூழ லால் இந்திய, சீன நாடுகள் எல் லையில் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்தியப் படைகளை மீட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக் கப்போவதாகத் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.