இந்தோனீசியா: 92,000 கைதிகளுக்கு மன்னிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியா தனது 72வது சுதந்திர நாளை நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண் டாடியது. அதனையொட்டி அந்நாட்டில் 92,817 சிறைக் கைதி- களுக்கு மன்னிப்பு வழங்கப் பட்- டுள்ளது. சட்டம், மனித உரிமைகளுக்- கான அமைச்சர் யாசோன்னா எச் லோலி இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்தார். மன்னிப்பு வழங்கப்பட்ட கைதி களில் 90,362 பேருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது, 2,444 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டனைக் காலத்தில் சிறை- யில் நன்னடத்தையுடன் இருந்த கைதிகள் அடையாளம் காணப்- பட்டு அவர்கள் மீண்டும் சமூகத்- துடன் இணைந்து புதிய வாழ்க்கை யைத் தொடர்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்றும் அமைச்சர் யாசோன்னா தெரிவித்தார்.

இந்நிலையில் ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி அமான் அப்துரஹ்மானுக்கு சுதந்திர தினத்தையொட்டி மன்னிப்பு வழங் கப்பட்டு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆணைக் கடிதத்- தைப் பெறுவ தற்கு முன்பாகவே பயங்கரவாதத் தடுப்புப் போலிசா- ரால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஜமா அன்ஷா ருட் டௌலா என் னும் பயங்கரவாத இயக்கத்- தின் தலைவரான இவருடன் பயங்கரவாதக் குற்றங்களுக்காக 35 பேர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். ஜமா இஸ்லாமியா பயங்கரவாத இயக்கத்தின் கட்டமைப்பின் முக்- கிய புள்ளியாகவும் அமான் கருதப் படுகிறார். சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளுக்கு வழங்கப் பட்ட இந்த மன்னிப்பால் நாட்டின் செலவினம் 102 பில்லியன் ரூப்பியாவாக (S$10.6 மில்லியன்) குறைந்துள்ளது என்றும் அவர் ஓர் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்தோனீசியா 1945 ஆகஸ்ட் 17ஆம் சுதந்திரமடைந்தது. அதன் முதல் அதிபராக சுகார்த்தா பதவி யேற்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon