வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் - அமெரிக்கா கூட்டணி

வா‌ஷிங்டன்: அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், மிகக் கடுமையான ராணுவ விளைவுகளை அது சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தற்காப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் கடந்த வியாழக் கிழமை வா‌ஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்- பானின் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனொ மற்றும் அதன் தற்காப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடெரா ஆகியோர் கலந்து கொண்ட செய்தி யாளர் கூட்டத் தில் அவ்வாறு கூறப்பட்டது. வா‌ஷிங்ட னில் நடந்த முக்கியம் வாய்ந்த “டு ப்ளஸ் டு” சந்திப்பின் பெரும் பகுதி இப்பிரச்சினையை சார்ந்தே இருந்தது. வடகொரியா தாக்குதல் நடத்தி னால் ஜப்பான் ராணுவ ஒத்து ழைப்பை மேலும் வலுவாக்கும் என்று ஜப்பானிய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

ஆதரவு நாடுகளின் ஒத்துழைப் போடு மிக வலுவான ராணுவ விளைவுகளை வடகொரியா எதிர் நோக்கும் என்றும் அதற்கு அமெ ரிக்க அதிபர் ஒப்புதல் வழங்கி யுள்ளதாகவும் திரு மேட்டிஸ் கூறினார். இத்தகைய கருத்து வெள்ளை மாளிகையின் தலைமைக் கொள்- கைப் பகுப்பாய்வாளர் ஸ்டீவ் பேனான் இவ்வார முற்பகுதியில் அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், வடகொ ரியா தாக்குதல் மேற் கொண் டால் அதை எதிர்கொள்வதற்கு ராணுவ ரீதியில் தீர்வு எதுவு மில்லை, ஏனெனில், வடகொரியா வெறும் வாயையே மெல்லுகிறது,” எனக் கூறியிருந்தார். ஜப்பான், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடகொரியாவின் தொடர் அச் சுறுத்தலை மிகவும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர்களின் ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறப்பட்டது.

வா‌ஷிங்டனில் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கொனொ (இடது), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன். படம்: ராய்ட்டர்ஸ்