சுடச் சுடச் செய்திகள்

நிலவனப்புத் தோட்டங்களுக்கு 100 ஹெக்டர்

சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதி யில் 100 ஹெக்டருக்கும் அதிக பரப்பளவு உள்ள நிலப்பகுதி நிலவனப்புத் தோட்டங்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது. அதில் முதல் நிலப்பகுதி பெறு வதற்கான ஏலக்குத்தகை இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கும். இந்த வர்த்தகத்துக்காக இப்போது தான் முதன்முதலாக நிலப்பகுதி ஒதுக்கி வைக்கப்படுகிறது என்று உள்துறை, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். இதுவரை நிலவனப்புத் தோட்டங்களுக்காகப் பிரத்தியேக மாக நிலம் ஒதுக்கிவைக்கப்பட வில்லை என்று அவர் கூறினார். பொதுவாக விவசாயத்துக்காக ஏலக்குத்தகைக்கு விடப்படும் நிலத்தில்தான் இப்போது நில வனப்புத் தோட்டங்களுக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிலவனப்புத் தோட்ட வர்த்தகம் பிற விவசாய வர்த்தகங்களுடன் போட்டியிடவேண்டி இருந்ததாகவும் திரு லீ கூறினார்.

ஹார்ட்பார்க்கில் நேற்று நில வனப்புத் துறைச் சந்தை நடந்தது. தேசிய பூங்கா கழகம் அதற்கு ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி யில் அமைச்சர் கலந்துகொண்டு பேசினார். லிம் சூ காங்கில் 12 நிலப் பகுதிகள் ஏலக்குத்தகைக்கு விடப் படுவதாக வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அண்மையில் அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் கழித்து இந்த நிலவனப்புத் தோட்டங்கள் தொடர்பான செய்தி வெளியாகியிருக்கிறது. ஏலக்குத்தகைக்கு விடப்படும் புதிய நிலப்பகுதிகள் லிம் சூ காங், சுங்கை தெங்காவில் அமைந் திருக்கின்றன. இந்த நிலப்பகுதிகள் அடிப் படை கட்டமைப்புகளைக் கொண்டு உள்ளதால் நிலவனப்புத் தோட்டங் கள் அங்கு விரைவில் அமைக்கப் படலாம். தொடக்கமாக 40 ஹெக்டர் நிலப்பகுதி நிலவனப்புத் தோட்டங் களுக்காக விடப்படும். அவற்றில் பாதி வரும் நவம்பர் மாதத்துக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் ஏலக்குத்தகைக்கு விடப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon