அதிபர் தேர்தல் சட்ட திருத்தம் குறித்து கோ

சிறுபான்மை இனத்தவருக்காக அதிபர் தேர்தல் ஒதுக்கப்பட அரசமைப்புச் சட்டத்தில் செய்யப் பட்ட திருத்தம், சிங்கப்பூரின் பல இன சமுதாயம் நடப்பிலிருப்பதை உறுதிப்படுத்த உதவும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நேற்று கூறினார். நாட்டின் அரசியல் செயல் முறையின் தனித்துவமிக்க நிலைப் பாட்டுமுறைகளில் இதுவும் ஒன்று என்றார் அவர். தனது மரின் பரேட் தொகுதியின் தேசிய தின விருந்தில் உரையாற்றிய திரு கோ, வெஸ்ட் மின்ஸ்டர் நாடாளுமன்ற செயல் முறையை உள்ளூர் நிலவரங் களுக்கு ஏற்ப அரசாங்கம் பல ஆண்டுகாலமாக நடைமுறைப் படுத்தி வருவதாகக் கூறினார்.

இதற்கென ‚சிங்கப்பூர் பாணி புத்தாக்க யோசனைகளை அறி முகப்படுத்தி, ஜனநாயக நடை முறையை நிலைப்படுத்தி வரு கிறது. பொறுப்பற்ற, ஊதாரித்தனமான அரசாங்கத்தைத் தட்டிக்கேட்கக் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒவ்வொரு ஐந்து நாடாளு மன்ற உறுப்பினர்களில் குறைந்தது ஒருவர் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்திராதவராக இருப்பதை உறுதிப்படுத்தும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியாயமான எண்ணிக்கையில் இருப்பதற்கு உத்தரவாதமளிக்கும் குழுத் தொகுதிமுறை போன்ற மற்ற நிலைப்பாட்டுமுறைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.