வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகர் பதவி விலகல்

வா‌ஷிங்டன்: அண்மைய காலமாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் பதவி நீக்கப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகரான ஸ்டீவ் பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரு பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா ஹுக்கபீ சாண்டர்ஸ் உறுதிப்படுத்தினார். திரு பேனனின் பதவி குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஜான் கெல்லி மறு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பத்திரிகை செயலாளர் கூறினார்.

ஸ்டீவ் பேனன் பதவி நீக்கம் செயயப்பட்டிருப்பது திரு ஜான் கெல்லிக்கு வெற்றியாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஸ்டீவ் பேனன். டிரம்புக்கான பிரச்சார யுக்தி களை ஸ்டீவ் வகுத்து வந்தார். பின்னர் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியாக ஸ்டீவ் பேனன் நியமிக்கப்பட்டார்.

Loading...
Load next