ரஷ்யாவில் ஒருவன் கத்தியால் தாக்கியதில் 8 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் சர்கட் நகரில் தெரு வழியாக நடந்து சென்றவர்களை ஒருவன் கத்தியால் தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். அந்த ஆடவரை போலிசார் சுட்டுக்கொன்றனர். தாக்குதலில் காயம் அடைந்த வர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. அந்த ஆடவர் எதனால் அத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலிசார் கூறினர். அந்த ஆடவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப் :பட்டிருந்திருக்கலாம் என்று போலிசார் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்தாக்குதலை “கொலை முயற்சி” என்று தாங்கள் வகைப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார். மாஸ்கோவிலிருந்து 2,100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சர்கட் நகரம். இந்நகரில் 350,000 பேர் வசிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon