‘என் இலக்கு நடிகர்கள் அல்ல; கதைதான்!’

எனது இலக்கு நாயகன்கள் அல்ல; நல்ல கதையம்சம் உள்ள படங் களிலேயே நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்களிலும் விஜய்யுடன் ‘பைரவா’ படத்திலும் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இப்போது சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் நானி, பவன் கல்யாணுடன் நடித்து வருபவர் ‘மகாநதி’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் நடிப்பது வரை நாயகன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இப்போது நாயகன்களின் படம் என்பதைவிட கதைக்கும் கதாபாத்திரத்திற்குமே முக் கியத்துவம் கொடுக்கிறாராம். “அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடனும் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அந்த வாய்ப்பு தானாக வரும். அதனால் வருகிற படங்களில் நல்ல படமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன். குறிப்பிட்ட நாய கன்களுடன் நடிக்கவேண் டும் என்பது எனது இலக்கு இல்லை. எனக்கு நல்ல கதைதான் முக்கியம்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon