செந்தில்: என் கையில் இப்போது மூன்று படங்கள் உள்ளன

என் கையில் மூன்று படங்கள் உள்ளன. நான் மிகவும் பரபரப் பான நடிகராகி விட்டேன் என்று கூறுகிறார் நகைச்சுவை நடிகர் செந்தில். ‘நானும் ரௌடிதான்’ படத் துக்குப் பிறகு சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித் துள்ளனர். படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ சுவரொட்டியை சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிட்டது படக் குழு. நீண்ட இடை வெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் நடித்துள்ள செந்திலின் அனுபவம் பற்றி கேட்க அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. மிகவும் மரி யாதையாக என்னைப் படக் குழுவினர் நடத்தினர். படத்தின் கதைக்கு நான் தேவைப் பட்டதால் என்னிடம் கேட்டார் கள். இந்தப் படத்தில் சூர்யா தம்பியுடன் படம் முழுக்க வருவேன். அவருடன் நிறைய நகைச்சுவைள் செய்திருக்கி றேன். என்னை சூர்யா, அண்ணன் என்றுதான் அழைப் பார். நான் அவரைத் தம்பி என்றுதான் கூப்பிட்டேன். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் சூர்யாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்போம். சூர்யாவின் நண்பனாகப் படத்தில் வருவேன். படத்தின் காதல் காட்சிகளைத் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் சூர்யாவுடன் வருவேன். இந்தப் படம் தவிர, இன்னும் மூன்று படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். மறுபடியும் நான் நடிப்பில் பரபரப்பாகி விட்டேன்,” என்கிறார் செந்தில்.

இதற்கிடையே ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருப்பதை அடுத்து, அப்படத் தின் இரண்டு வேடங்களிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து மறுபடியும் பட வாய்ப்புகளை தூக்கி நிறுத்த தயாராகிறார் வடிவேலு. அதன் காரணமாக தற்போது விஜய்யின் ‘மெர்சல்’ உட்பட சில படங்களில் நகைச்சுவை நடிகனாக நடித்திருக்கும் வடிவேலு, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி-2’ படத்தில் நடித்து முடிக்கும்வரை நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.

Loading...
Load next