சுடச் சுடச் செய்திகள்

உணவை மறுத்து தியானத்தில் ஈடுபட்டுள்ள முருகன்

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான முருகன், ஜீவ சமாதி அடைய அனுமதி கேட்டு முதல்வருக்கு கடிதம் வழி மனு அளித்துள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உணவு உட்கொள்ளாமல் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து முருகன் தியானத்தில் ஈடுபட்டுள்ள தாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் காலை முதல் உணவு எதுவும் சாப்பிடாமல் தாம் அடைக்கப்பட்ட அறையில் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ள அவர், நேற்றும் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை. “கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். விடுதலை கிடைக்கும் என்ற நம் பிக்கை எனக்கு இல்லை. எனவே, ஜீவ சமாதி அடைவதற்காக உணவு உண்ணாமல் இருக்கப் போகிறேன். அதற்கு அனு மதி அளிக்க வேண்டும்,” என முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார் முருகன். முருகன் மனு அளிக்காததால் நேற்று அவரது மனைவி நளினியுடனான சந்திப்பு ரத்தானது. உண்ணாவிரதம் நீடித்தால் முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் ரத்து செய்யப் படும் என சிறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon