சுடச் சுடச் செய்திகள்

கனமழையால் நிரம்பி வரும் ஏரிகள்: பொது மக்கள் மகிழ்ச்சி

தஞ்சை: கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் கன மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளும் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென் னையைச் சுற்றியுள்ள நீர்நிலைக ளில் 47 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் அதிகரித்துள்ளது. வறண்டு காய்ந்து கிடந்த செம் பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 4 மாதங்களாக சென்னையில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.

தற்போது பெய்து வரும் மழையால் ஏரிகள் நிரம்பும் நிலையில், குடிநீர் பிரச்சினை முடிவுக்கு வரும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீடித்து வரும் கனமழை காரணமாக அணைக ளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் பல அடி உயர்ந்துள்ளது. இதற்கிடையே செய்தியாளர்க ளிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பால சந்திரன், தமிழகத்தின் வட மாவட் டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ள தாகத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon