சென்னையில் 23,615 பேர் ஒரே இடத்தில் பல் துலக்கி சாதனை

சென்னை: பொதுமக்களிடையே பற்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் 23,615 பேர் கூடி பல்துலக்கி ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தனர். சென்னை போரூர் பகுதியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், வயதானவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். பிரபல தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வின் மூலம், பற்களை முறையாகத் தேய்த்துப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தனர்.