சுடச் சுடச் செய்திகள்

நெடுந்தொலைவு ஓட்டம்: சிங்கப்பூருக்குத் தங்கம்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரின் சோ ரியூ யோங் தங்கப் பதக்கத் தைத் தக்கவைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்திலும் அவர் வாகை சூடினார் என்பது குறிப் பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற போட்டியை அவர் 2 மணி 29 நிமிடங்கள் 27 வினாடிகளில் முடித்து முதலிடம் பிடித்தார். இந்தோனீசியாவின் அகுஸ் பிராயோகோ இரண்டாவது இடத்திலும் மலேசியாவின் முஹாய்சார் முகம்மது மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

“வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முதல் முறை தங்கம் வென்றபோது இதைவிட அதிக அளவு மகிழ்ச்சி அடைந்தேன். சிங்கப்பூரில் சொந்த நாட்டு மக்களுக்கு முன் அப்போது தங்கம் வென்றதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பந்தயத்தில் முன்னிலை வகித்து முடிவு கோட்டை நோக்கி விரைந்த சிங்கப்பூர் வீரர் சோ ரியூ யோங். பந்தயத்தை முடிப்பதற்கு முன்பே மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாட தொடங்கினார். வழியில் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்ட ரசிகர்களுக்கு ‘ஹை=ஃபை’ கொடுத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon