நீர்ப்பந்து: எட்டாக் கனியான தங்கப் பதக்கம்

கோலாலம்பூர்: தங்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய சிங்கப்பூரின் மகளிர் நீர்ப்பந்துக் குழுவுக்கு நேற்று ஏமாற்றமே மிஞ்சியது. இறுதி ஆட்டத்தில் தாய்லாந்திடம் அது 5=1 எனும் புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நீர்ப்பந்துக்கான இறுதி ஆட்டத்தில் சொந்த ரசிகர்களுக்கு முன் இதே தாய்லாந்து அணியிடம் சிங்கப்பூர் மகளிர் 5=4 எனும் புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.

இம்முறை பழி தீர்த்து தங்கம் வெல்லவேண்டும் என்றிருந்த சிங்கப்பூர் அணியை தாய்லாந்து எளிதில் உதறித் தள்ளியது. தாய்லாந்தின் அதிரடி ஆட்டத்துக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் சிங்கப்பூர் மகளிர் தவித்தனர். இறுதி ஆட்டம் எந்த அணிக்குச் சாதகமாக முடியும் என்ற பரபரப்பான சூழல் அரங்மெங்கும் சூழ்ந்திருந்தது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய மூன்று நிமிடங்களில் தாய்லாந்து அதன் முதல் புள்ளியைப் பெற்றது. சிங்கப்பூர் மகளிர் கடுமையாகப் போராடி ஆட்டத்தைச் சமன் செய்தனர். இதையடுத்து, தாய்லாந்து கோல் மழை பொழிந்தது. தோல்வி அடைந்த சிங்கப்பூர் அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்தப் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது. உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு நல்ல தொடக்கம் கிடைத்ததைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார் ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மத்துல்லா ஷஹீதி (நடுவில்).

26 May 2019

திக்குமுக்காடிய பாகிஸ்தான், இலங்கை

(இடமிருந்து) மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் சயட் சடிக், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ.

25 May 2019

மான்செஸ்டர் சிட்டி குழு உரிமையாளரின் மலேசிய முதலீடு