சீனாவுக்குக் கடிவாளம் போட இந்தியா திட்டம்

புதுடெல்லி: சீனாவை நோக்கமாகக் கொண்டு சில குறிப்பிட்ட துறை களில் வெளிநாட்டு முதலீடு களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு தொலைத் தொடர்பு சேவை, கைபேசி விற்பனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மின்சார பகிர்மான வசதிகள் வழங்கு வதிலும் பல நாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மின் பகிர்மானத்துக்குத் தேவைப்படும் கருவிகள் சீனாவி லிருந்து தருவிக்கப்படுகின்றன. ஆனால் இவை நாட்டின் பாது காப்புக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய 18 மாநிலங்களில் மின்சார பகிர்மான வேலைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தால் இணையத் தாக்குதல் நடை பெற்றால் பல மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறினர். இந்நிலையில் மின் விநியோக வசதி அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மின்சார ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் 10 ஆண்டுகள் இந்தத் தொழிலில் இருக்க வேண்டும். அதன் தலைமை நிர்வாகத்தில் இந்தியர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தில் பணி யாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு இந்தியாவில் வசித் திருக்க வேண்டும். மின் பகிர்மான கருவிகளுக்கு மூலப்பொருட்கள் வாங்கப்படும் விவரங்களை வெளி யிட வேண்டும். இந்தக் கருவிகள் தரம் குறைந்து இருந்தால் அந்நிறு வனம் இந்தியாவில் எங்கும் செயல்பட முடியாது. இது போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை விதிக்க மத்திய மின் சார ஆணையம் பரிந்துரை செய்ய வுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்த நிலையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தால் இந்தியாவில் பெரும்பாலான மின் பகிர்மான திட்டங்களில் ஈடு பட்டுள்ள சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தகர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை ஆராய்ந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!