ஐஎஸ் பிடியில் உள்ள கடைசி நகரைக் கைப்பற்ற ஈராக் தாக்குதல்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள கடைசி நகரான டல் அஃபாரை திரும்பக் கைப்பற்ற ஈராக்கிய தரைப்படை தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ள தாக அதிகாரிகள் கூறினர். “அந்நகரில் உள்ள ஐஎஸ் போராளிகள் ஒன்று எங்களிடம் சரண் அடைய வேண்டும் அல்லது அங்கேயே மடிய வேண் டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந் தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று ஹைதர் அல் அபாடி தெரிவி த்துள்ளார். மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் இவ்வாறு கூறினார். ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மோசுல் நகரை ஈராக்கியப் படை கடந்த ஜூலை மாதம் கைப்பற்றியது.

ஐஎஸ் போராளிகளின் கோட்டை யாக விளங்கிய அந்நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் சிரமப்பட்டது. இருப்பினும் கூட்டணிப் படையின் உதவியுடன் மோசுல் நகரை ஈராக்கிய ராணுவம் திரும்பக் கைப்பற்றியது. டல் அஃபார் நகரம் 2014ஆம் ஆண்டு ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இங்கு ‌ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். மோசுல் நகருக் கும் சிரியா எல்லைக்கும் இடை யில் முக்கிய சாலைப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. தரைப் படைத் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு அந்நகரில் உள்ள ஐஎஸ் இலக்கு கள் மீது ஈராக்கிய விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கின.

ஈராக்கில் ஐஎஸ் வசம் இருந்த பல நகரங்களை ஈராக் கியப் படை படிப்படியாக கைப் பற்றின. கடைசியாக டல் அஃபாரை திரும்பக் கைப்பற்ற தீவிரமாக தாக்குதலில் ஈடு பட்டுள்ள ராணுவம் விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று அறிவித்துள்ளது.

Loading...
Load next