இனவாத மோதலுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

போஸ்டன்: அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் சென்ற வார இறுதியில் மூண்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்புத் தெரி வித்து அமெரிக்காவின் பல இடங்களில் சனிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது, போஸ்டன் நகரில் மட்டும் சுமார் 40,000 பேர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதாக போலிசார் கூறினர். சென்ற வார இறுதியில் வெர்ஜினியாவின் சார்லோட்ஸ்வில் நகரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட இனவாத மோதலில் 32 வயது மாது ஒருவர் உயிரிழந்தார். சார்லோட்ஸ்வில் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ராபர்ட் இ லீ சிலை அகற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் போஸ் டன் நகரில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணிக்கு எதிராக போஸ்டன் நகர தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போஸ்டன் நகர தெருக்களில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வெர்ஜினியாவின் சார்லோட்ஸ்வில் நகரில் சென்ற வாரம் நடந்த இனவாத மோதல்களைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next