விரைவில் வெளியாகும்: செல்வா நம்பிக்கை

`நெஞ்சம் மறப்பதில்லை’ விரை வில் வெளியாகும் என அதன் இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த சில வாரங் களுக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற் கேற்ப பல முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் பட வெளியீடு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன், இசை யமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனா கவும் ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள் ளனர். கதைப்படி ரெஜினாவுக்கு பேய் வேடம் என்று கூறப்படுகிறது.

“கடைசியாக, எனது இயக் கத்தில் ‘இரண்டாம் உலகம்’ படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை உருவாக்கி உள்ளேன். “அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், படம் தயாரிப்பாளரின் கையில் இருக்கி றது. வெகு விரைவில் வெளி யாகும்,” என்கிறார் செல்வராக வன். இப்படத்தை ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் சார்பில் கவுதம் மேனனும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதனும் இணைந்து தயாரித் துள்ளனர். செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’யைக் காண ரசிகர் கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்