ஓவியா: அப்படியொரு அன்பு வேண்டாம்

பிறரைத் தொந்தரவு செய்து தன்னிடம் அன்பு காட்டும் ரசிகர்கள் தனக்குத் தேவையில்லை என்கிறார் ஓவியா. இனி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகத் தாம் பங்கேற்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுப் படங்களில் நடிக்க விரும்பவில்லை என ஓவியா கூறியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். “நிறைய படங்களில் நடிக்கப் போகிறேன். அவற்றில் என்னைக் காணலாம். எனக்காக மட்டுமே படத்தைப் பார்க்காதீர்கள், படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும் பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் என்னை ஏசினாலும் கவலையில்லை,” என்று சொல்லியிருக்கிறார் ஓவியா.

Loading...
Load next