1955ஆம் ஆண்டு வெளியான ‘குலேபகாவலி’யின் தொடர்ச்சி

எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இது கடந்த 1955ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஒரு பிளாஷ்பேக் காட்சி இருப்பதாகவும், அதில் இரு படங்களுக்குமான இணைப்பு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்துக்கு விவேக், மெர்வின் இசையமைத்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.