கிரிக்கெட்: மியன்மாரை வீழ்த்தியது சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மியன்மாரை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோற்கடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியன்மாரின் அபாரப் பந்துவீச்சு சிங்கப்பூர் வீரர்களைச் சற்று பதற்றமடையச் செய்தது. இருப் பினும், 6 விக்கெட்டுகள் இழப் புக்கு 100 ஓட்டங்கள் எடுத்து சிங்கப்பூர் அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததது.