தலைகீழான கொடி: மன்னிப்பு கேட்ட மலேசியா

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கான சஞ்சிகையில் இந்தோனீசியாவின் கொடி தலைகீழாகப் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து இந்தோனீசியாவிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, இந்தோனீசியாவின் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மலேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேரில் சென்று மன்னிப்பு கேட்க இருப்பதாகக் கூறப்படுகிறது. போட்டிகளுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட சஞ்சிகை நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க விழாவின்போது விநியோகம் செய்யப்பட்டது. போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்தோனீசிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Loading...
Load next