27வது தங்கம் வென்ற நீர்ப்பந்து வீரர்கள்

சிங்கப்பூர் ஆண்கள் நீர்ப்பந்து அணி அதன் 27வது தென்கிழக் காசிய விளையாட்டுப் போட்டி களுக்கான தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதுவே சிங்கப்பூரின் நீண்ட காலத் தொடர் வெற்றியாகும். நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவுடன் அது மோதியது. இதில் தங்களது அபாரத் திறனை வெளிப்படுத்திய சிங்கப்பூர் வீரர்கள் 17=4 எனும் புள்ளிக் கணக்கில் வாகை சூடினர். இறுதி ஆட்டத்துக்கு முன்பு சிங்கப்பூர் இரண்டு வெற்றி களையும் ஒரு சமநிலையையும் பதிவு செய்திருந்தது. எனவே, தங்கம் வெல்ல இறுதி ஆட்டத்தில் மலேசியாவைக் குறைந்தது இரு கோல்கள் இடைவெளியில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இறுதி ஆட்டத்தின் முதல் நான்கு நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் கோல்கள் போட வில்லை. ஆனால் அதனை அடுத்து சிங்கப்பூர் உடனுக்குடன் இரண்டு கோல்களைப் போட்டு மலேசியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தொடர்ந்து கோல் மழை பொழிந்த சிங்கப்பூர் இடைவேளையின்போது 6=1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இடை வேளைக்குப் பிறகும் சிங்கப்பூர் ஆதிக்கம் செலுத்தி மேலும் பல கோல்களைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது.

மலேசிய தற்காப்பை முறியடித்து சிங்கப்பூருக்காக கோல் போடும் சாய் ஜிங் லுன் (வலமிருந்து இரண்டாவது). சிங்கப்பூரின் அதிரடி தாக்குதலில் மலேசியாவின் தங்கப் பதக்கக் கனவு மூழ்கியது. படம்: லிம் சின் தாய்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon