மலேசியாவிடம் தங்கத்தை இழந்த சிங்கப்பூர் மகளிர்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் வலைப்பந்துக்கான இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் படுதோல்வி அடைந்தது நடப்பு வெற்றியாளரான சிங்கப்பூர் அணி. நேற்று பிற்பகல் ஜுவாரா வி ளை யா ட் ட ர ங் க த் தி ல் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 65=41 எனும் புள்ளிக் கணக்கில் மலேசியா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை சிங்கப்பூரிடமிருந்து பறித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தில் 46-=43 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை ஆட்டம் தொடங்கி யதிலிருந்து மலேசியா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் களமிறங்கிய மலேசியாவின் தாக்குதல் ஆட்டக்காரர் ஆன் நஜ்வா அசிஸான் துல்லியமாகப் பந்தை வீசி, அதை வலைக்குள் புகுத்தி தமது அணிக்குப் பல புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். முதல் பாதியின் முடிவில் மலேசியா 36=12 எனும் புள்ளிக் கணக்கில் மலேசியா முன்னிலை வகித்தது. மலேசியாவுக்குக் கிடைத்த இந்த அபாரமான சாதக நிலைக்கு நஜ்வா முக்கிய காரணமாக அமைந்தார். பிற்பாதி ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் சர்மேன் சோவிடமிருந்து (இடது) பந்தைத் தட்டிப் பறிக்கும் மலேசியாவின் நூர் அஸார். படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்