தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற கிரண்பேடி

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட புதுவை ஆளுநர் புதுவை: புதுவையில் பெண்க ளுக்குத் தகுந்த பாதுகாப்பு இருப்பதாக அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் அவர் இருசக்கர வாகனம் ஒன்றில் ரகசியமாக புதுவை நகரில் வலம்வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆளுநர் மாளிகை பெண் ஊழியருடன் இருசக்கர வாகனத் தில் சென்ற அவர், தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடி இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பல்வேறு இடங்களுக்கும் சென்று பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், இரவு 12.30 மணியளவில் ஆளு நர் மாளிகைக்குத் திரும்பினார். இதையடுத்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட அவர், புதுவையில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும் காவல் துறையி னர் கூடுதலாக சுற்றுக்காவல் பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு சில அறிவுரை களையும் உத்தரவுகளையும் வழங்கி உள்ளேன்,” என்று கிரண்பேடி மேலும் தெரிவித் துள்ளார். துணை நிலை ஆளுநராகப் பதவி விகிக்கும் ஒருவர் தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப் போர் நடந்து வருகிறது. மாநில அரசின் அதிகார வரம்புகளில் ஆளுநர் கிரண் பேடி தேவையின்றி தலையிடுவதாக ஆளுநர் கிரண் பேடி மீது குற்றம்சாட்டியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. அண்மையில் சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் கிரண் பேடி அளித்த தேநீர் விருந்தை புதுவை முதல்வரும் அமைச்சர்களும் ஒட்டுமொத்த மாகப் புறக்கணித்தனர்.

 தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி . படம்: தகவல் ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon