சுடச் சுடச் செய்திகள்

அதிமுகவின் 3 அணிகளை பாஜக மிரட்டி வருகிறது: ராமகிருஷ்ணன்

சென்னை: அதிமுகவின் ஒவ்வோர் அணியையும் பாஜக தலைமை மிரட்டி வருவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் (படம்) குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக அணிகளைத் தனக் குச் சாதகமாக மாற்றி பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் நேற்று முன் தினம் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் துவக்கிவைத்துப் பேசிய அவர், அதிமுக மூன்றாகப் பிரிந்ததால் அரசு நிர்வாகம் செய லற்றுக் கிடப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

“காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வருகி றது. ஆனால் தமிழக அரசோ மாநில நலனைப் பாதுகாக்க முடி யாமல் பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறது. “அதிமுகவில் உள்ள மூன்று அணிகளின் முட்டல் மோதல்களே தற்போது முக்கியச் செய்தியாக மாறுகிறது. மக்கள் பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகிறது,” என ராம கிருஷ்ணன் கவலை தெரிவித்தார். இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வீரிய மான பிரசாரம் நடைபெற்று வருவ தாகக் குறிப்பிட்ட அவர், முறை சாரா தொழிலாளி ஒருவர் மாதம் 8 ஆயிரம் ரூபாய் கூலி பெற்றால் கூட அவருக்கு ரேசன் பொருள் கிடைக்காது என்ற நிலையை மத் திய அரசு உருவாக்கியுள்ளதாச் சாடினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon