தேசிய தினப் பேரணி உரை -2017: புத்தெழுச்சி பெறும் பாலர் கல்வி

பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தின உரையில் ஆரம்பகால மழலையர் துறையை படிப்படியாக உயர்த்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டார். மழலையர் தங்களது வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும் இளம் பிள்ளை களைக் கொண்டிருக்கும் குடும்பங் களை ஆதரிப்பதற்குமான பய னுள்ள நடவடிக்கைகள் அவை. பாலர் கல்வியின் தரம், அணு கும் திறன், அதிக செலவின்மை ஆகியவற்றை மேம்படுத்த கடந்த 2012ஆம் ஆண்டு அரசாங்கம் மேற்கொண்ட கடப்பாடுகளின் கணிசமான முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் வரையப்பட்டு உள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு முன்ன தாக, அரசாங்கம் கூடுதலாக 50,000 இடங்களை பாலர் பராமரிப்பு நிலையங்களிலும் பாலர் பள்ளிகளிலும் குறிப்பாக, இளம் குடியிருப்புப் பேட்டைகளான பொங் கோலிலும் செங்காங்கிலும் உரு வாக்கியது. மேலும் 40,000 முழுநேர பாலர் பள்ளி இடங்கள் உருவாகும் அடுத்த ஐந்தாண்டுக்குள் கூடுதலாக 40,000 முழுநேர பாலர் பள்ளி இடங்களை பெற்றோர் எதிர்பார்க்கலாம். இதன் மூலம் மொத்த பாலர் பள்ளி இடங்கள் 200,000 ஆக அதிகரிக்கும். இந்த எண்ணிக்கை இப்போது இருப்பதைக் காட்டிலும் முப்பது விழுக்காடு அதிகம். கூடுதல் பாலர் பள்ளி இடங் களில் பெரும்பாலானவை இளம் குடும்பத்தினர், எளிதில் அணுகும் வகையில், புதிய வீவக குடியிருப்பு மேம்பாடுகளில் அமையும்.

ஆரம்பகாலக் கல்வியில் அரசாங்கம் செலுத்திவரும் அதிக அக்கறைகளைப் பற்றி விவரித்த பிரதமர் லீ, குடிமக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் செங்காங் வெஸ்ட் குடியிருப்பாளர்களை “சாம்பியன்ஸ்” என்று அவர் பாராட்டினார். செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லாம் பின் மின் (நடுவே) நடத்திய பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள். படம்: மக்கள் கழகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon