காற்பந்து: ஆர்சனலை வீழ்த்திய ஸ்டோக் சிட்டி

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஆர்சனல், ஸ்டோக் சிட்டி குழுக்கள் நேற்று முன்தினம் மோதின. ஸ்டோக் சிட்டியின் புதிய ஆட்டக்காரர் ஹேசே ரோட்ரிகேஸ் 47வது நிமிடத்தில் புகுத்திய கோலால் ஆர்சனல் இப்பருவத்தின் அதன் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஸ்டோக் சிட்டி அதன் சொந்த மண்ணில் ஆடிய ஆட்டத்தில் 1=0 கோல் எண்ணிக்கையில் வெற்றியைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் லெஸ்டர் சிட்டியை போராடி வென்ற ஆர்சனலுக்கு இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத் தது. கோலை புகுத்த பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றை நழுவவிட்டது வெறுப்பை ஏற்படுத்தியதாக ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் கூறினார். “இத்தகைய ஆட்டத்தில் தவறுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆனால், இரண்டாவது பாதியில் சுறுசுறுப்பற்ற முறையில் விளையாடியதால் அதற்கான விளைவுகளை ஏற்கவேண்டும்,” என்று வெங்கர் கூறினார். சென்ற புதன்கிழமைதான் ஸ்டோக் சிட்டி குழுவில் சேர்ந்த ஹேசே, முதல் ஆட்டத்திலேயே அபாரமாக விளையாடி அசத்தி னார். “ஹேசேவின் திறமையும் அவர் ஸ்டோக் சிட்டியில் சேர்ந்தது அந்த குழுவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் பலர் அறிவர். ஓரிரு பயிற்சிகள் மட்டுமே செய்தபிறகு இந்த ஆட்டத்தில் களம் இறங்கி வெற்றியைத் தேடி தந்துள்ளது ஆச்சரியம்தான். இதுபோலவே இனி அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்,” என்று ஸ்டோக் சிட்டியின் நிர்வாகி மார்க் ஹியூஸ் கூறினார். இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் சுவான்சீ அணியும் பொருதிய ஆட்டத்தில், யுனைடெட் அபார வெற்றி பெற்றது. எதிரணியின் விளையாட்டரங் கத்தில் விளையாடிய யுனைடெட் 4=0 கோல் எண்ணிக்கையில் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆர்சனல் ஆட்டக்காரர் கொடுக்கும் நெருக்குதலையும் பொருட்படுத்தாது வலை நோக்கி பந்தை அனுப்பும் ஸ்டோக் சிட்டியின் ஹேசே ரோட்ரிகுவேஸ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி