நீரிழிவைத் தவிர்க்கும் வழிகளை தேடுவதில் தீவிர ஆர்வம்

வில்சன் சைலஸ்

ஆரம்பகாலக் கல்வித் துறையை மேம்படுத்துதல், சிங்கப்பூரர்களைப் பாதித்துள்ள நீரிழிவைக் கட்டுப் படுத்துதல், தொழில்நுட்பப் பயன் பாட்டின் மூலம் சிங்கப்பூரை அறி வார்ந்த தேசமாக உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் திரு லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி யில் விளக்கி இருந்தார். இவற்றுள் இந்தியர்களை அதி கமாகக் கவர்ந்தது நீரிழிவு குறித்து அவர் முன்வைத்த விவ ரங்கள். அறுபது வயதுக்கு மேற் பட்ட இந்தியர்களில் பத்தில் ஆறு பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள னர் என்ற தகவல் பல இந்தியர் களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், அதிகமாக சோறு உண்ணும் காரணத்தால் இந்தி யர்களில் பலர் நீரிழிவால் பாதிக்கப் பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஒரு சிலர் தெரி வித்தனர்.

“ஒவ்வொரு நாளும் சோறு உண்பதுடன் திருமணங்கள், பண் டிகைகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் இனிப்பு சாப்பிடு வது இந்தியர்களின் வழக்கங்க ளில் ஒன்றாக உள்ளதால் நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்றார் 47 வயது திருமதி கோமளவள்ளி. பேரணியில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக்கொண்ட திருமதி கோமளவள்ளி, உடற் பயிற்சி செய்வது, அளவாக உண் பது ஆகிய வழிமுறைகளைப் பின் பற்றுவதாகக் கூறினார். இருப் பினும், மருத்துவ பரிசோதனைக ளுக்கு முன்கூட்டியே சென்றிருந் தால் நீரிழிவைத் தவிர்த்திருக் கலாம் என்பது இவர் ஆணித்தர மான கருத்து.

“மருத்துவப் பரிசோதனை களுக்கு அவ்வப்போது செல்வது நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உத வும். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் மருத்துவ பரிசோதனைகள் உதவு கின்றன,” என்றார் 45 வயது திரு பர்னட் ஜான். பேரணியில் கலந்துகொண்ட இவர், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனை களுக்குச் செல்வது ஆரோக்கி யமாக வாழ்வதற்குக் கைகொடுக் கும் என்றார். நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட பிறகு மாரத்தான் ஓட்டங்களில் தொடர்ச் சியாக பங்குபெறத் தொடங்கி யதைப் பகிர்ந்துகொண்ட திரு பெர்னார்ட், உடற்பயிற்சி செய்ததன் காரணமாக மருந்து உட்கொள்ள அவசியம் இல்லாமல் போனது என்றார்.

நீரிழிவு குறித்து இந்தியர்களில் சிலர் கவனக்குறைவாக உள்ளனர் என்றார் 39 வயது திரு சரவணன் கோவிந்தசாமி. தேசிய பூங்கா, மெதுவோட்ட தடங்கள் என வீடமைப்பு பேட்டை களில் உள்ள உடற்பயிற்சி வசதி களை இந்தியர்கள் பயன்படுத்த முன்வரவேண்டும் என்ற அவர், மூத்தோரும் உடற்பயிற்சியின் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என் றார். இதே கருத்தை முன்வைத்த 47 வயது திரு மணி ராஜாங்கம், அளவோடு உண்பதும் நீரிழிவைத் தவிர்ப்பதற்கான உத்தி என்றார். ஏழு மணிக்குள் இரவு உணவு உண்பதைப் பகிர்ந்துகொண்ட இவர், நீரிழிவால் பாதிக்கப்பட்ட தந்தையின் மூலம் 30 வயதிலிருந்து அளவோடு உண்டு அனுதினமும் உடற்பயிற்சி செய்வதாக குறிப் பிட்டார்.

சொங் பாங் பகுதியில் உள்ள வசிப்போர் குழு தலைவருமான திரு மணி, தமது வட்டாரத்தில் உள்ள இந்தியர்களிடம் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்ப துடன் விளையாட்டு அம்சங்களை ஏற்பாடு செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon