லண்டன் நகர நவீன வீதியாக உருமாறும் மஸ்ஜித் இந்தியா

மலேசிய தலைநகர் கோலாலம்பூ ரில் உள்ள மஸ்ஜித் இந்தியா வட் டாரம் பெரிய அளவில் மேம்பாடு காண உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. லண்டனின் ஆக்ஸ்ஃ போர்ட் வீதிக்கு இணையாக அதனை உருவாக்கும் முயற்சிகள் விரைவில் தொடங்க இருப்பதா ‘த ஸ்டார்’ இணையத்தளம் தெரி வித்து உள்ளது. மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள பிரபல ஜாலான் மெலாயு பஸார் விரைவில் முழுமையாக இடிக்கப்பட உள்ளது. அதன் மூலம் அதன் பழமைத் தோற்றம் மாற்றப்பட்டு நவீன கடைத் தொகுதி வட்டாரமாக உருவாக் கப்பட உள்ளது. மஸ்ஜித் இந்தி யா வட்டாரம் முழு வதும் நவீன தோற்றம் காணும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நிறை வேற்றப்பட உள்ளன. கடை வீதிக்கு வருவோரின் வசதிக்காக நடைபாதைகளும் நவீனமயமாக உள்ளன. இப்பகுதியை முழுமையாக மாற்றியமைப்பதற்கான மேம் பாட்டுத் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்னரே வரையப்பட்டது. ஆனால், மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தை நம்பி பல்லாண்டு காலம் பிழைப்பு நடத்தி வரும் வர்த்தகர்களும் கடை முதலாளிகளும் தங்களது கடை இடிபட்டு வர்த்தக இழப்பு ஏற்படும் எனக் கருதி அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon