அமெரிக்க மாலுமிகளை தேடி மீட்க சிங்கப்பூர் உதவிக்கரம்

சிங்கப்பூரின் கிழக்குக் கடற் பகுதியில் நேற்றுக் காலை வர்த் தகக் கப்பல் ஒன்றுடன் மோதி சேதமடைந்த அமெரிக்க போர்க் கப்பல் யுஎஸ்எஸ் ஜான் எஸ். மெக்கைன் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு கப்பல்களும் மோதி விபத்து ஏற்பட்டபோது காணமற்போன பத்து மாலுமிகளைத் தேடி மீட் கும் பணி தொடர்ந்து நடைபெற் றது. சிங்கப்பூரின் கடல் எல்லை யில் உள்ள பெட்ரா பிராங்காவின் வடக்குப் பகுதியில் அவர்கள் தேடப்பட்டனர். இதற்கிடையே, மோதலின் போது போர்க்கப்பலில் பெரிய துவாரம் ஏற்பட்டதாக அமெ ரிக்கக் கடற்படை தெரிவித்தது. அதன் விளைவாக கப்பலி னுள் உள்ள அறைகளில் கடல் நீர் புகுந்தது. கப்பல் ஊழியர்கள் படுத்துறங்கும் அறை, இயந்திர சாதனங்கள் அறை மற்றும் தொடர்புக்கருவிகள் உள்ள அறை ஆகியவற்றில் நீர் புகுந் ததைத் தொடர்ந்து மேலும் பல பகுதிகளுக்கு நீர் பரவிச் செல் லாமல் தவிர்க்கும் முயற்சிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.

ஏவுகணைப் பாய்ச்சலை முறி யடித்து அழிக்கும் திறன்கொண்ட அமெரிக்க போர்க்கப்பல் தனது வழக்கமான சிங்கப்பூர் வரு கையை மேற்கொண்டிருந்தது. நேற்றுக் காலை 5.24 மணிக்கு அல்னிக் எம்சி என்னும் சரக்குக் கப்பலுடன் எதிர்பாராதவிதமாக அது மோதியது. அதன் விளைவாக போர்க் கப்பலில் இருந்த ஊழியர்கள் காயமுற்றனர். மேலும் பத்து மாலுமிகளைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன வென்று தெரியாதநிலையில் கடல் நீருக்குள் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அந்தப் பணிகளுக்கு உதவிக் கரம் நீட்ட சிங்கப்பூர் கடற்படை முன்சென்றது. காயமுற்றோரில் நால்வரை சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஏற்றிச் சென்றது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் கள் உடனடியாக சேர்க்கப்பட்ட னர். ஐந்தாமவர் மருத்துவ உதவி கள் தேவைப்படாத அளவுக்கு லேசான காயமடைந்திருந்தார். அல்னிக் சரக்குக் கப்பலைச் சேர்ந்த எவரும் காயமடைய வில்லை என்று சிங்கப்பூர் கடற் துறை துறைமுக ஆணையம் தெரிவித்தது.

மோதியதன் விளைவாக அமெரிக்க போர்க்கப்பலின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட பெரிய துவாரம். ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

20 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2019

தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர் கைது