சுடச் சுடச் செய்திகள்

மழலையர் துறையின் மேம்பாடுகளுக்கு வரவேற்பு

ப. பாலசுப்பிரமணியம்

தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்த ஆரம்பகால மழலையர் துறையின் அடுத்தகட்டத் திட்டங்களை மழலையர், பாலர் பள்ளி ஆசிரியர் கள் பலர் வரவேற்றுள்ளனர். அறிவித்த திட்டத்தின்படி, அடுத்த ஐந்தாண்டுக்குள் கூடுத லாக 40,000 முழுநேர பாலர் பள்ளி இடங்களை பெற்றோர் எதிர்பார்க்கலாம். இதன் வழி மொத்த பாலர் பள்ளி இடங்கள் 200,000 ஆக அதிகரிக்கும். இரண்டு மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைக ளைப் பராமரிக்க புதிதாக ஆரம்ப கால மழலையர் நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது 15ஆக இருக்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 50 ஆக உய ரும்.

மேலும் ஆரம்பகால மழலைய ருக்கான நிபுணர்களை உருவாக் கும் தேசிய திட்டத்தின்கீழ் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகம் ஒன்று புதிதாக தொடங்கப்படும் என்றும் அறிவிக் கப்பட்டது. தற்போது தெமாசெக் பல துறைத் தொழிற்கல்லூரி, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், ‘சீட்’ கழகம் போன்றவை ஆரம் பக்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற் சிகள் வழங்கி வருகின்றன. இவை புதிதாக அமைக்கப்படும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தில் ஒருங்கி ணைக்கப்படும்.

பாலர் பள்ளி தமிழ் ஆசிரியர் திருமதி ரம்யா (வலது) போல இதர தமிழ் ஆசிரியர்களும் பாலர் பள்ளி மாணவர்களைக் கவரும் வகையில் தமிழ் கற்பித்து வருகிறார்கள். படம்: திமத்தி டேவிட்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon