சுடச் சுடச் செய்திகள்

‘கிட்ஸ்டார்ட்’: ஆக்ககரமான ஆதரவு

வசதி குறைந்த பிள்ளைகளுக்கான ‘கிட்ஸ்டார்ட்’ என்ற ஒரு செயல்திட்டம் ஓராண்டுக்கு முன்னோடித் திட்டமாக நடப்புக்கு வந்தது. அந்தத் திட்டத்திற்கு ஆதரவு இருப்ப தாக இப்போது தெரியவந்திருக்கிறது. ஆறுக்கும் மேற்பட்ட வயதுள்ள பிள்ளைகளுக்கு பலதரப்பட்ட ஆதரவை அந்தத் திட்டம் வழங்குகிறது. அத்திட்டத்தில் இப்போது 400 குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன. “இப்போது பிள்ளைகள் நன்கு உரையாடுகிறார்கள். கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். சிறந்த முறையில் கலந்துறவாடுகிறார்கள்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் ஞாயிற்றுக்கிழமை குறிப் பிட்டார்.

இந்தப் பலன்கள் உண்மை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம் மேலும் பல பிள்ளைகளுக் குப் பலன் அளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று திரு லீ கூறினார். கிட்ஸ்டார்ட் திட்டத்தின்படி தொண் டூழியர்கள் பிள்ளையின் வீட்டிற்கே சென்று குழந்தை களுக்கான சத்துணவு, குழந்தைகள் பராமரிப்பு பற்றி பெற்றோருக்குப் போதிக்கிறார்கள். ஒன்று முதல் மூன்று வயதுள்ள பிள்ளைகளுக்கு விளையாட்டுக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்தகைய பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களில் கவனித்துக்கொள்வதில் ஒருமித்த கவனம் செலுத்தும் வகையில் பாலர்பள்ளிகளில் இதற்கா கவே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் ‘கிட்ஸ்டார்ட்’ பற்றி நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon