அறப்பணி சட்டத் திருத்தங்கள்: கருத்துகளைத் தெரிவியுங்கள்

அறப்பணி சட்டத்திற்குப் பல மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மாற்றங்கள் பற்றி கருத்துகளைத் தெரிவிக்கும் படி அறப்பணி ஆணையர் அலு வலகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. மக்கள் செப்டம்பர் 11 வரை கருத்து தெரிவிக்கலாம். அறப் பணி சட்டம் கடைசியாக 2010ல் திருத்தப்பட்டது. அந்தச் சட்டத் திற்குப் பல மாற்றங்கள் இப்போது உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றன. அறப்பணி தொடர்பான ஒழுங்குமுறைக் கொள்கைகள் இன்னமும் ஏற்புடையதாக இருப் பதை அந்த மாற்றங்கள் உறுதிப் படுத்தும். அறப்பணித் துறையின் ஆளுமைத் தரங்களை அவை மேம்படுத்தும் என்று கலாசார, சமூக இளையர் அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கணினியில் அறப் பணி அமைப்பு, அல்லது ரீச் அமைப்பின் இணையத்தளம் மூலம் தெரியப்படுத்தலாம். MCCY_Charities@mccy.gov.sg என்ற முகவரியில் அமைச்சிடமும் மக்கள் கருத்துகளைத் தெரிவிக்க லாம். அல்லது ஹில் ஸ்திரீட்டில் இருக்கும் இந்த அமைச்சின் அறப்பணி ஆணையர் அலுவலகத் திற்கு கடிதம் மூலம் கருத்துகளை அனுப்பலாம்.