மின்னிலக்கத் தேர்ச்சி: டிபிஎஸ் $20 மில்லியன் திட்டம்

டிபிஎஸ் வங்கி சிங்கப்பூரில் பணியாற்றும் தன்னுடைய 10,000 ஊழியர்களின் மின்னிலக்க வங்கி முறை தேர்ச்சிகளை மேம்படுத்தவும் புதுப்புது தொழில்நுட்பங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்த ஐந்தாண்டுகளில் பரந்த அளவிலான ஒரு செயல்திட் டத்தை $20 மில்லியன் செலவில் நடப்புக்குக் கொண்டுவரும். சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக ஆக்குவதற்கு மேலும் பலவற்றை நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் வலியுறுத்தினார். அதற்கு செவிசாய்க்கும் வகையில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறது.

இந்த வங்கி நடப்புக்கு கொண்டு வரும் செயல்திட்டம் அதிக அளவிலான ஊழியர்கள் கலந்து கொள்ள ஊக்கமூட்டும். வங்கியின் அனைத்து ஊழி யர்களும் மின்னிலக்க முறைக்கு மாறிக்கொள்ள அது வழிவகுக்கும். “நிதித்துறை பரிணமித்து வருவதால் வேலைகளில் நியதிகள் மாறுகின்றன. ஊழியர்கள் புதுப் புது தொழில்நுட்பங்களைத் தழு விக்கொண்டு மின்னிலக்க முறைக்கு மாறுவதில் உதவ நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கி றோம்,” என்று டிபிஎஸ் வங்கி குழுமத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லீ யான் கோங் தெரி வித்தார். புத்தாக்க ஆற்றல் நிறைந்த ஊழியர் அணி இருந்தால் அது அறிவார்ந்த தேசமாக மேம்பட வேண்டும் என்ற சிங்கப்பூரின் கனவு நனவாக உதவும் என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon