டெக்சஸ் பல்கலைக் கழகத்தில் இரவில் குதிரை சிலை அகற்றம்

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் டெக்சஸ் வளாகத்தில் இருந்த குதிரை சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கத்தை நினைவூட்டும் வகையில் இருந்த சிலையால் மோதல் ஏற்பட வாய்ப்பிருந்ததால் அந்தச் சிலை அகற்றப்பட்டதாக பல்கலையின் தரப் பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் உள்ள சார்லோட்ஸ்வில் நகரில் கடந்த வாரம் இனக்கலவரம் மூண்டதால் பல்கலைக் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சார்லோட்ஸ்வில் பூங்காவில் ராபர்ட் இ லீ சிலை அகற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து வெள்ளை இனத்தவர் ஒருவர் கூட்டத் தின் மீது வேனை செலுத்தினார். இதில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

மோதலைத் தவிர்ப்பதற் காக சிலை அகற்றப் பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்