பினாங்கு அமைச்சர் மறுப்பு

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் லஞ்ச, ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் பினாங்கு மாநில அமைச்சரான பீ பூன் போ, தமது வங்கிக் கணக்கில் இரண்டு மில்லியன் ரிங்கிட் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள் ளார். ஒரு வார மருத்துவ விடுப்புக்குப் பிறகு நேற்று அவர் வேலைக்குத் திரும்பினார். என்னு டைய வங்கிக் கணக்கு முடக்கப்படுவதாக அதிகாரிகள் எதுவும் தம்மிடம் தெரிவிக்க வில்லை என்றும் அவர் சொன்னார். “என்னுடைய நான்கு வங்கிக் கணக்கில் இரண்டு மில்லியன் ரிங்கிட் இருக்கிறது என்றும் இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன என்றும் ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல்களைக் கண்டு நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி யடைந்தோம்,” என்று திரு பீ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் திரு பீ பூன் போவை ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கோப்புப் படம்