‘வடகொரியா ஆத்திரமூட்டும் வகையில் செயல்படக்கூடாது’

சோல்: வடகொரியாவின் அடாவடித் தனமான செயலால் கொரிய தீபகற்பத் தில் பதற்றம் நிலவும் வேளையில் தென் கொரியாவும் அமெரிக்காவும் நேற்று கூட்டு ராணுவ பாவனைப் பயிற்சியைத் தொடங்கின. வடகொரியா தனது அணுவாயுத ஆற்றலுடன் ஏவுகணைகளைப் பாய்ச்சி அக்கம்பக்க நாடுகளை மிரட்டி வரு கிறது. அண்மையில் அது பாய்ச்சிய நெடுந்தொலைவு ஏவுகணை அமெரிக் காவின் பகுதிகளையும் தாக்கும் வகை யில் நெருக்கமாகக் கடலில் விழுந் தது. அப்போது அமெரிக்காவையும் தாக்க முடியும் என்று வடகொரியா கொக்கரித்தது. இந்நிலையில் ஐநாவின் பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 270 மில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டியுள் ளது.

இந்த நிலையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளன. இது குறித்துப் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், இந்த கூட்டு ராணுவப் பயிற்சி தற்காப்புக்கு மட்டுமே நடத்தப்படுகிறது என்று வலியுறுத்தினார். "ஆண்டுதோறும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல. தற்காப்புக்காகவே நடத்தப்படுகிறது. "ஆனால் அமைதியை இலக்காகக் கொண்ட எங்களுடைய ராணுவப் பயிற்சியை மிகைப்படுத்தி ஆத்திர மூட்டும் செயல்களில் வடகொரியா ஈடுபடக்கூடாது.

"இது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்," என்று அதிபர் மூன் குறிப்பிட்டார். அமெரிக்காவும் தென்கொரியாவும் இம்மாதம் 31ஆம் தேதி வரை கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. அணுவாயுத பலம் கொண்ட வடகொரியாவுக்கு எதிராக தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டு ராணுவப் பயிற்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் கணினி வழி யிலான பாவனைப் பயிற்சிகளும் அடங் கும். ஆனால் இத்தகைய பயற்சி தம் முடைய நாட்டுக்குள் ஊடுருவுவதை நோக்கமாகக் கொண்டது என்று நம் பும் வடகொரியா அப்போதைக்கு அப் போது ஏவுகணைகளைப் பாய்ச்சி மிரட்டி வருகிறது. வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நெருங்கிய நட்பு நாடான சீனாவும் அந்நாட்டின் செயலை கண்டும் காணாமல் உள்ளது.

தென்கொரியாவில் கூட்டு ராணுவப் பயிற்சியின் ஓர் அங்கமாக பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சியில் பொதுமக்களும் பங்கேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!