மீண்டும் திரையுலகில் செய்யும் நஸ்ரியா

திருமணத்துக்குப் பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இத்தனைக்கும் மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் ஃபஹாத் ஃபாசிலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கேள்வி. ஆனாலும் நடிக்க வரவில்லை. இந்நிலையில், திடீரென நடிப்பில் மீண் டும் ஆர்வம் ஏற்பட்டு சில கதைகளைக் கேட்டு வந்துள்ளார் நஸ்ரியா. ஆனால் எந்தக் கதையுமே திருப்தி தரவில்லையாம். இதற்கிடையே, மலையாளத்தில் ‘பெங் களூர் டேஸ்’ படத்தை இயக்கிய பெண் இயக்குநர் அஞ்சலி மேனன் சொன்ன கதை நஸ்ரியாவுக்குப் பிடித்துவிட்டதாம். தமிழ், மலையாளத்தில் உருவாகும் இப்படத்தில் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்காக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கேள்வி.