ஸ்பர்ஸை வீழ்த்திய செல்சி

லண்டன்: ஸ்பர்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி தோற்கடித்துள்ளது. மார்க்கஸ் அலோன்சோ போட்ட இரண்டு கோல்கள் செல்சிக்கு இப்பருவத்துக்கான முதல் வெற்றியைத் தந்துள்ளது. ஆட்டத்தில் ஸ்பர்ஸ் ஆதிக்கம் செலுத்தியபோதும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது. ஸ்பர்ஸ் குழுவின் வயிட் ஹார்ட் லேன் விளையாட்டரங் கத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம் வெம்பிளி விளையாட்டரங் கத்தில் அரங்கேறியது.

ஆட்டத்தின் 24வது நிமிடத் தில் அலோன்சோ கோல் போட்டார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் செல்சி முன்னிலை வகித்தது. 82வது நிமிடத்தில் செல்சி ஆட்டக்காரர் பாட்ஸ்வாயி போட்ட சொந்த கோல் ஆட்டத்தைச் சமன் செய்தது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது செல்சியின் வெற்றி கோலை அலோன்சோ போட்டார். மற்றோர் ஆட்டத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் தோல்வி யைத் தழுவியது.

Loading...
Load next