தென்கிழக்காசிய விளையாட்டு: தங்கம் வென்ற ஸ்கூலிங்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்களுக் கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப் பூரின் நட்சத்திர வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம் வென்றுள்ளார். பந்தயத்தை அவர் 23.06 வினாடிகளில் முடித்து புதிய சாதனை நேரத்தைப் படைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் இதே பந்தயத்தை முடிக்க அவர் 23.49 வினாடிகள் எடுத்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. இந்தோனீசியா இரண்டாவது இடத்தையும் வியட்னாம் மூன் றாவது இடத்தையும் பிடித்தன. 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் குவா ஜிங் வென் தங்கம் வென்றார். அதுமட்டுமல்லாது, புதிய தேசிய சாதனை நேரத்தையும் அவர் படைத்தார்.

போட்டியை அவர் 2 நிமிடங்கள் 12.03 வினாடிகளில் முடித்தார். இரண்டாவது இடத்தில் வியட் னாமும் மூன்றாவது இடத்தில் தாய்லாந்தும் வந்தன. ஆண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்து நீந்தும் நீச்சல் போட்டியில் ஜிங் வென்னின் சகோதரரான குவா செங் வென் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் இந்தோனீசிய வீரர் தங்கம் வென்றார். வியட்னாம் வீரர் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் எதேச்சைப்பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் பாங் ஷெங் ஜுன் நான்காவது இடத்தில் வந்து பதக்கம் வெல்லத் தவறினார்.

தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூரின் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon