இந்திய சுதந்திர தினத்தை ஒட்டிய அணிவகுப்பில் கனடா பிரதமர்

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை ஒட்டி கியூபெக் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற அணிவகுப்பில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார். வயலட் நிற குர்த்தா உடையில் இந்தக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அணிவகுப்பில் ஆற்றிய உரையின் இறுதியில் ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறி உரையை முடித்த அவர் கனடாவில் வாழும் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கனடாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 15வது ஆண்டாக கனடாவில் கொண்டாடப்படும் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பலமுறை ட்ரூடோ கலந்துகொண்டாலும் பிரதமர் என்ற முறையில் அவர் முதன் முதலாகக் கலந்துகொண்டதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு நீடித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அணிவகுப்புப் பாதையில் பல்வேறு தரப்பிரனருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் ட்ரூடோ. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next