மீண்டும் விசாரணை: சசிகலா தரப்பு கோரிக்கை

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதி மன்றத்தில் முன்வைத்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வ ருக்கு உச்ச நீதிமன்றம் நான் காண்டு சிறைத் தண்டனை விதித் துள்ளது. எனினும் ஜெயலலிதா காலமாகிவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மட்டுமே சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு ஒன்றை அதே நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவைத் தாக்கல் செய்து 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி (நேற்று) இது குறித்த விசாரணை நடை பெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சசி கலா. ஜெயலலிதா இறந்த பின்னர் வழக்கின் தன்மை மாறியுள்ளதால், சொத்துக்குவிப்பு வழக்கை மீண் டும் விசாரிக்க வேண்டும் என்பதே சசி தரப்பினரின் வாதம். மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் விரை வில் அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படும் நிலையில், சசிகலா தரப்பில் இந்தப் புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.