சுடச் சுடச் செய்திகள்

அழிக்கத் துடிக்கும் மோடி: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி தமிழக மக்களின் தலையில் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டு அழிக்கத் துடிப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி மதிமுக சார்பில் நேற்று முன்தினம் முதல் வர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கைக்கூலியாகி விட்டதாகக் காட்டத்துடன் கூறினார். “தமிழகத்தில் எல்லோரும் அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிடுவார்கள். நிலக்கரி படுகைகளில் பல்வேறு வாயுக்கள் எடுக்கப்பட்டு லட்சோப லட்சம் கோடி பணம் இந்தியாவுக்கு கிடைக்கும். “சீனாவைக் கூட பொருளாதாரத்தில் இந்தியா வெற்றி கொள் ளும். ஆனால் நாங்கள் அழிந்துபோவோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் செழித்து வாழ்ந்த எங்கள் அன்னை பூமி அழிந்துபோகும்,” என்றார் வைகோ. முதல்வர் பதவியில் நீடிக்க பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், செப்டம்பர் 15ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon