அரசு ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் பங்கேற்றதாக அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோவின் நிர்வாகிகள் தெரிவித்தனர். படம்: ஊடகம்