ஓபிஎஸ் வசம் கூடுதல் துறைகள்; மோடி வாழ்த்து

சென்னை: துணை முதல்வரா கப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை யில் இணைந்த பன்னீர்செல் வத்துக்கு முதலில் நிதித்துறை, வீட்டு வசதித்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சட்டமன்ற விவ காரங்கள், திட்டமிடல், தேர்தல் துறை ஆகியவையும் அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக துணை முதல் வராகப் பொறுப்பேற்பதற்கு முன் அதிமுக தலைமை அலுவலகத் தில் கட்சியினர் முன்னிலையில் பேசிய ஓபிஎஸ், நல்ல நாளில் இரு அணிகள் இணைந்துள்ள தாகத் தெரிவித்தார். “நாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். எங் களை யாராலும் பிரிக்க முடியாது. “சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை மறந்து ஒன்றிணைந்திருக்கி றோம். இந்த இயக்கத்தை ஜெய லலிதா உருவாக்கியதன் உண் மையான நோக்கத்தை உணர்ந்து இணைந்துள்ளோம். என் மனதில் இருந்த பாரம் இன்றோடு குறைந்துவிட்டது,” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.