சுடச் சுடச் செய்திகள்

இத்தாலியில் நிலநடுக்கம்: இருவர் பலி, பலர் காயம்

ரோம்: இத்தாலியில் சுற்றுலாத் தலமான இஸ்சியா தீவில் நேற்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின்போது ஒரு தேவலாயத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாது உயிரிழந்ததாகவும் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் மற்றொருவர் உயிரிழந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறின. இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் ஒரு வீட்டில் படுக்கைக்கு அடியில் சிக்கிக்கொண்ட இரு சிறுவர்களை மீட்பதில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சிறார்களின் தாயும் தந்தையும் காப்பாற்றப்பட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon