இந்தோனீசியாவில் 538 இடங்களில் காட்டுத் தீ எரிகிறது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 538 இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதை துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு கலிமந்தானில் 193 இடங்களிலும் பாப்புவாவில் 143 இடங்களிலும் தீப்பற்றி எரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வழக்கமாகவே வறட்சி காலம் என்பதால் இக்கால கட்டத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவக்கூடும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நிலங்களை சுத்தப்படுத்த புதர்களுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தோனீசியா எடுத்து வருவதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon